ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 15-12-2019 அன்று 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்டார். இது சம்பந்தமாகப் பதியப்பட்ட போக்சோ வழக்கில் சிலம்பரசன் என்பவன் கைது செய்யப்பட்டான். இவ்வழக்கின் விசாரணை ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சில நாள்களில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த சிலம்பரசன் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துவந்தான். பாலியல் குற்றவாளி சிலம்பரசன் போலீஸார் தீவிரமாகத் தேடிய நிலையில், 2023-ம் ஆண்டில்தான் பிடிபட்டான் சிலம்பரசன். இதையடுத்து, மீண்டும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டான். இந்த வழக்கில் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. பாலியல் குற்றவாளியான சிலம்பரசனுக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.30,000 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார் நீதிபதி தேன்மொழி. இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டான் சிலம்பரசன். இந்தப் போக்சோ வழக்கில் சிறப்பாகப் புலனாய்வு மேற்கொண்டு குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுதந்த போலீஸாரை ராணிப்பேட்டை எஸ்.பி. சிபின் பாராட்டினார். போக்சோ வழக்கில் போலீஸாரின் அக்கிரமம். இழப்பீடு ரூ.9 லட்சத்தை சம்பளத்தில் பிடிக்க உத்தரவு! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/crime/minor-girl-sexual-assault-case-arcot-youth-sentenced-to-14-years-of-rigorous-imprisonment




