திருவள்ளூர், வெள்ளவேடு அருகே ஏடிஎம் இயந்திரத்தை பணத்துடன் கடத்திச் சென்ற வழக்கில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 3 பேரை ஆவடி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ஏடிஎம் எந்திரம் கொள்ளை திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே கடந்த செப்டம்பர் 5-ம் தேதி ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் ஏடிஎம் மையங்களில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. வெள்ளவேடு பகுதியில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்ட வங்கியில் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தில் சுமார் ரூ.12 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆவடி துணை ஆணையர் வினோத் சாந்தாராம் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த தனிப்படையினர் நேற்று இரவு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் சமீம் (30), ஷாபாகான், ரசூல் என தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து ஒரு வேன் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து எடுத்து வாகனத்தில் கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறுகின்றனர். மேலும், இந்த கொள்ளை கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது யார்? கொள்ளை சம்பவங்களில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் சென்னை அழைத்து வரும் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த பின்னர், போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-3-arrested-in-atm-robbery-case




