திருவனந்தபுரம், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கேரளா மாநிலம் கொச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. புதுக்கோட்டை தம்பதி தகவலின் அடிப்படையில் அபுதாயில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ரிப்னஸ் ஹமீது முகமது ஷெரீப் (வயது 26) அவரது மனைவி ஜனோபர் காதர் பீவி உமர் பரூகி (வயது 23) தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. ரூ. 1.94 கோடி தங்கத்தை உருக்கி பேஸ்ட் ஆக மாற்றி அதை தாங்கள் அணிந்திருந்த ஆடையிம் மறைத்து கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடமிருந்து 1.35 கிலோ எடையுள்ள 24 காரட் தங்கத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 1.94 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தங்கத்தை கடத்தி வந்த தம்பதியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/pudukottai-couple-held-at-kochi-airport-with-gold-worth-nearly-rs-2-crore




