பழனி, பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.3.98 கோடி கிடைத்துள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் கடந்த 21-ந்தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இந்நிலையில் நேற்று, பழனி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதற்கு கோவில் இணை ஆணையர் பொறுப்பு வெங்கடேஷ் தலைமை தாங்கினார். உண்டியல் காணிக்கை எண்ணும் பணி முதல் நிலை கணக்கு அலுவலர் குருநாதன் மேலாளர் உமா ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக உண்டியல்கள் திறக்கப்பட்டு அதிலுள்ள காணிக்கைகள் கார்த்திகை மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பணம். தங்கம், வெள்ளி உள்ளிட்டவை தனித்தனியாக பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதன்மூலம் ரூ.3 கோடியே 60 லட்சத்து 30 ஆயிரத்து 714-ம், தங்கம் 635 கிராம், வெள்ளி 9155 கிராம். வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 918-ம் கிடைத்தன. இதேபோல் திருஆவினன்குடி கோவிலில் ரூ.37 லட்சத்து 66 ஆயிரத்து 801, தங்கம் 24,320 கிராம், வெள்ளி 478.300 கிராம் கிடைத்தது. மீனாட்சி அம்மன் கோவிலில் 29ஆயிரத்து 715 கிடைத்துள்ளது. இதன் மூலம் மொத்தம் ரூ.3 கோடியே 98 லட்சத்து 27 ஆயிரத்து 230 கிடைத்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/devotional/banknote-offering-of-rs-398-crore-at-palani-murugan-temple




