கடந்த 5 நாள்களாகவே, சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில்தான் இருந்தது. இன்று ட்விஸ்ட் கொடுத்து அதிரடியாக ஏறியுள்ளது தங்கம் விலை. கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி முதல் நேற்று (செப்டம்பர் 2) வரை, சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.865-உம், பவுனுக்கு ரூ.6,920-உம் குறைந்திருந்தது. ஆனால், இன்று கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ரூ.14,240-க்கும், பவுனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,13,920-க்கும் விற்பனையாகி வருகிறது. ஒரே நாளில் ரூ.2,000-த்திற்கு மேல் உயர்ந்துள்ளது சற்று அதிர்ச்சியைத்தான் தருகிறது. தங்கம்"30 நாள்களுக்கு மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் IPO-க்களை வாங்கக்கூடாது; ஏன்?" - சமீர் அரோரா யோசனை உயர்விற்கு என்ன காரணம்? சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்ததே, சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதற்கான காரணம். சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதற்கான மிக முக்கிய காரணம் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப். நேற்று ட்ரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘ஈரான் மீதான தாக்குதல் கொஞ்ச நாளுக்குத்தான்’ என்று பேசியிருந்தார். ஒருவேளை, ட்ரம்ப் சொன்னதுபோல, ஈரான் மீதான தாக்குதல் விரைவில் முடிவுக்கு வந்தால், எண்ணெய், எரிசக்தி விலை உயர்வு, அதிகரிக்கும் பணவீக்கம் போன்ற அச்சுறுத்தல்கள் குறையும். முதலீட்டாளர்கள் தங்கம் பக்கம் தங்களது முதலீடுகளைத் திருப்பியுள்ளனர். இதனால், தானாகவே தங்கம் விலை உயர்ந்துள்ளது. வாய்ப்பு இருக்கு! ஈரான், அமெரிக்கா மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால், தங்கம் விலையில் நிலையற்றத் தன்மை தொடர்ந்து நீடித்து வருகிறது. அதாவது, ஐந்து நாட்கள் இறக்கத்திற்குப் பிறகு, இன்று ஏறியுள்ளது. இதனால், தங்கத்தில் டிரேடிங் வாய்ப்பு நன்கு உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/personal-finance/gold/gold-price-surges-in-chennai-after-five-days-of-decline




