ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 51 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தனியிசை துறையில் ராப் பாடகராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. பின்னர் இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். ‘ஆம்பள’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இதன்பின் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து இயக்கி நடித்துள்ள படம் ‘மீசைய முறுக்கு 2’. இந்த படத்தில் கெட்டிகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன், சைத்ரா ஜே. ஆச்சார், நாசர், ஹர்ஷத் கான், பாபா பாஸ்கர், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கானா பாடல்களையும், கானா கலைஞர்களின் வாழ்க்கையையும் மையமாக வைத்து ‘மீசைய முறுக்கு 2’ படம் உருவாகியுள்ளது. ரூ.51 கோடி வசூல் இந்நிலையில், இப்படம் வெளியாகி நான்கு நாட்களில் உலகளவில் ரூ.51 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களிலும் திரையரங்குகளில் ரசிகர்களின் வருகை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டு வெளியான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’ மீண்டும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. Idhu just numbers illa… namma padathukku kedacha pure love ❤️ ₹51.3 CR and counting! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/hiphop-aadhis-meesaya-murukku-2-film-grosses-rs-51-crore




