கடலூர், கடலூர் மாவட்டத்தில் யு.கே.ஜி. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். யு.கே.ஜி. மாணவிக்கு பாலியல் தொல்லை கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு தனியார் தொடக்கப் பள்ளியில், 5 வயது யு.கே.ஜி. மாணவிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதம் இதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட சிறுமியின் பெற்றோர் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த சிதம்பரம்நகர போலீசார், முற்றுகையிட்டவர்களை கலைந்துபோகச் செய்தனர். போலீசார் தீவிர விசாரணை போலீசார் சிறுமியிடம் விசாரித்து, சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைக்காக அண்ணாமலைநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியைச் சேர்ந்த ஒருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/ukg-student-sexually-harassed-in-cuddalore-police-investigate




