ரபாத், மொராக்கோ நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக, பாத்திமா எஸ்ஸஹ்ரா அல் மன்சூரி புதிய பிரதமராக நியமிக்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளார். அந்நாட்டில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இவரது கட்சி வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து, மொராக்கோ மன்னர் ஆறாம் முகமது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். யார் இந்த பாத்திமா? சட்டத்துறையில் பட்டம் பெற்ற பாத்திமா எஸ்ஸஹ்ரா, ஆரம்பத்தில் ஒரு திறமையான வழக்கறிஞராக தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் அரசியல் களத்தில் குதித்த அவர், கடந்த 2009-ஆம் ஆண்டு மொராக்கோவின் புகழ்பெற்ற மராகேஷ் நகரின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் அந்த நகரின் முதல் பெண் மேயர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். மக்களின் பாராட்டு தொடர்ந்து மக்கள் செல்வாக்குடன் வலம் வந்த பாத்திமா, கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் நகர்ப்புற திட்டமிடல் மற்றும் வீட்டுவசதி துறை மந்திரியாக பதவி வகித்து, பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு மக்களின் பாராட்டுக்களை பெற்றார். தேர்தலில் வெற்றி அண்மையில் நடைபெற்ற மொராக்கோ நாடாளுமன்ற தேர்தலில், பாத்திமா தலைமையிலான பிஏஎம்’கட்சி அதிக இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. அரசியல் சட்ட விதிகளின்படி, தேர்தலில் அதிக இடங்களை வென்ற கட்சியின் தலைவரையே பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதால், மன்னர் ஆறாம் முகமது இவரை புதிய பிரதமராக அதிகாரப்பூர்வமாக நியமித்து உத்தரவிட்டுள்ளார். அரபு நாடுகளில் 3-வது பெண்! மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற மகுடத்தை சூடியுள்ள பாத்திமா, ஒட்டுமொத்த அரபு நாடுகளின் வரலாற்றிலேயே பிரதமராக பொறுப்பேற்கும் 3-வது பெண்மணி என்ற பெருமையையும் தட்டி சென்றுள்ளார். முன்னதாக துனிசியா நாட்டின் பிரதமர்களாக நஜ்லா பவுடன் மற்றும் சாரா ஜாபரானி ஆகியோர் பொறுப்பு வகித்த நிலையில், தற்போது பாத்திமா அந்தப் பெருமைமிகு பட்டியலில் இணைந்துள்ளார். பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி உலகமே உற்று நோக்கும் 2030-ஆம் ஆண்டு பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளுடன் இணைந்து மொராக்கோவும் நடத்த உள்ளது. இந்த உலக கோப்பைக்கான உள்கட்டமைப்பு வசதிகள், அதிநவீன மைதானங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த நூற்றுக்கணக்கான கோடி டாலர் முதலீடுகளை ஈர்க்க வேண்டிய பிரம்மாண்ட பொறுப்பு புதிய பிரதமர் பாத்திமா தலைமையிலான அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/new-history-in-the-arab-world-fatima-appointed-as-moroccos-first-female-prime-minister




