கோவை, கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- த.வெ.க. ஆட்சியில் 116 நாட்களில் கொலை, கொள்ளை, பாலியல் என 500 குற்றங்கள் நடந்துள்ளன. சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இது விஜய் கவனத்திற்கு வந்ததா? போதைப்பொருட்கள் பயன்பாடும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இவற்றை தடுக்க அரசு மேற்கொள்ள உள்ள உறுதியான நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் விஜய் தெளிவான பதிலை அளிப்பார் என எதிர்பார்த்தோம். ஆனால், அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் இறுதி தீர்ப்பாகாது. நீதிமன்ற விசாரணை மற்றும் தீர்ப்புக்கு பிறகே குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கருத முடியும். எனவே, விசாரணை அமைப்புகளின் குற்றச்சாட்டுகளை மட்டும் அடிப்படையாக வைத்து ஒருவரை குற்றவாளி என முடிவு செய்வது சரியல்ல. எதிர்கட்சியினர் தவறு செய்திருந்தால், அதற்கான ஆதாரம் இருந்தால் முதல்-அமைச்சர் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கலாம். ஒரு குற்றம் நடந்த பிறகு வழக்குப்பதிவு செய்து, கைது செய்வது மட்டுமே அரசின் கடமை அல்ல. குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதே ஒரு அரசின் முக்கிய பொறுப்பு. முதல்-அமைச்சர் தனது பதிலுரையில் தி.மு.க.வை மட்டுமே விமர்சனம் செய்துள்ளார். ஊழல் ஒழிப்பு என்று கூறிவிட்டு, தி.மு.க.வை ஒழிப்பதில்தான் த.வெ.க. குறியாக உள்ளது. முதல்-அமைச்சர் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்த வேண்டும். சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் விஜய் ஆவேசமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. அவரது பதிலுரை சினிமா பாணியில் மட்டுமே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-is-focused-solely-on-eliminating-the-dmk-krishnasamys-interview



