மலப்புரம், கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொடைக்கல் பகுதியில் ஒருவர் தன்னை அபு அலவி மஜ்லி சில் என அறிமுகப்படுத்தி கொண்டு, மந்திரித்த வாழைப்பழத்தை ஏலம் விடுவதாக தெரிவித்தார். இந்த வாழைப்பழத்தை வாங்கி சாப்பிட்டால், விரும்பியது நடக்கும் என்று கூறியுள்ளார். இதையடுத்து வாழைப் பழம் ஏலம் விடப்பட்டது. ரூ.1,000-த்தில் தொடங்கிய ஏலம், முடிவில் ரூ.2,500-க்கு விலை போனது. ஏலம் எடுத்த வாலிபருக்கு வாழைப்பழம் வழங்கப்பட்டது. அப்போது மேடையில் போர்வை போர்த்திக்கொண்டு இருந்த அபு அலவி மஜ்லி சில், வாழைப்பழத்தின் தோலை மெதுவாக உரிக்குமாறு கூறினார். அதன்படி, வாலிபர் தோலை உரித்தபோது உள்ளே வாழைப்பழம் ஏற்கனவே துண்டுகளாக வெட்டப்பட்டு இருந்தது. அவர் கூறியதை நம்பி, வாலிபரும் வாழைப்பழத்தை சாப்பிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. தற்போது ஒரு கிலோ நேந்திரன் வாழைப்பழம் ரூ.100-க்கு விற்கும் நிலையில், மந்திரித்த ஒரு வாழைப்பழத்தை ரூ.2,500-க்கு ஏலம் விடப்பட்ட சம்பவம் பேசுபொருளானது. இதையடுத்து அபு அலவி மஜ்லிசில் ஏமாற்றும் செயலில் ஈடுபடுவதாக கூறி, அவர் தங்கியிருந்த வீட்டிற்குள் இளைஞர்கள் புகுந்து பொருட்களை தாக்கினர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-banana-blessed-with-the-promise-that-ones-wishes-would-come-true-was-auctioned-for-2500




