தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தற்போது வார விடுமுறை தினம் என்பதால், ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பரிசலில் பயணம் செய்ய தடை இந்த நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால், காவிரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரியில் 4.500 கன அடியில் இருந்து 7,000 கன அடியாக நீர் வரத்து உயர்ந்துள்ளது. இந்த நிலையில் வார விடுமுறை தினமான இன்று ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. அங்குள்ள அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாபயணிகள் பரிசலில் பயணம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-okenakkal-disappointed-as-travel-ban-imposed




