புதுடெல்லி, காவிரி நதிநீரை கர்நாடகம், தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்களும் பிரச்சினை இன்றி பகிர்ந்து கொள்வதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு கடந்த 2018-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அப்போதிலிருந்து தற்போது வரை இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி நதிநீர் பிரச்சினைகளை தீர்த்து வருகின்றன. இந்த வகையில் மேலாண்மை ஆணையம் 52 முறை கூட்டப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 54-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க 4 மாநிலங்களின் அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுத்து உள்ளனர். இந்த கூட்டத்தில் 4 மாநில அதிகாரிகளும் நேரிலோ அல்லது காணொலி வாயிலாகவோ கலந்து கொள்வார்கள். கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து தமிழக அதிகாரிகள், ஆணையத்திடன் வலியுறுத்த உள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/cauvery-management-authority-meeting-to-be-held-in-delhi-today




