Full artikkel
பெற்றோர், சகோதரி உள்ளிட்ட மூன்று பேரை, மகளே கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. murder தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டு பெங்களூருவில் வசித்து வரும் கம்ப்யூட்டர் எஞ்சினியரான சோமசுந்தர் - முத்துலட்சுமி தம்பதிக்கு ஸ்வேதா, ப்ரியா என இரு மகள்கள். கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் முடித்துள்ள ஸ்வேதா கென்னட் என்பவரை காதலித்து வந்ததை பெற்றோர்கள் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறி அடுக்குமாடி குடியிருப்பில் காதலன் கென்னட்டுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஸ்வேதா வீட்டுக்கு சென்ற சோமசுந்தர், முத்துலட்சுமி, ப்ரியா ஆகியோருக்கும் ஸ்வேதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமான ஸ்வேதா, காதலனுடன் சேர்ந்து மூவரையும் கத்தியால் குத்தி கொலை செய்து தப்பித்து சென்றுள்ளனர். கென்னட் - ஸ்வேதா சத்தம் கேட்டு அக்கம்பக்கம் வசிப்பவர்கள் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்பு காவல்துறையினர் அங்கு வந்து விசாரணை நடத்தினர். தலைமறைவான ஸ்வேதாவையும், காதலனையும் தனிப்படையினர் தேடி வந்த நிலையில் புதுச்சேரி தப்பித்துச் செல்லும் வழியில் ஸ்வேதாவை இன்று கைது செய்தனர். கென்னட்டை தேடி வருகின்றனர். பெங்களூரு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள இந்தச் சம்பவம் குறித்து ஸ்வேதாவிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Full artikkel — se lenken under




