கார்டூமின், சூடான் - தெற்கு சூடான் எல்லையில் ஏற்பட்ட மோதலில் 26 பேர் உயிரிழந்தனர். வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். இதன் அருகே அமைந்துள்ள நாடு தெற்கு சூடான். சூடானில் இருந்து பிரிந்த வடக்கு சூடான் கடந்த 2011ம் ஆண்டு தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. அதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப்பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாட்டு எல்லையில் அமைந்துள்ள அபேயி நகரை இரு நாடுகளும் உரிமை கோருகின்றன. இதனால், இந்த நகரம் தற்போது ஐ.நா. கட்டுப்பாட்டில் உள்ளது. மோதல் - 26 பேர் பலி இதனிடையே, அபேயி நகரில் உள்ள சந்தையில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. நகோக் டிங்கா - மிசிரியா ஆகிய இரு பிரிவினர் இடையே நேற்று நடந்த மோதலில் 26 பேர் உயிரிழந்தனர். மேலும், 82 பேர் படுகாயமடைந்தனர். இந்த மோதலால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/26-killed-in-clashes-along-sudan-south-sudan-border-region




