சென்னை, சுபமுகூர்த்த மற்றும் விசேஷ தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆடிப்பெருக்கு இந்நிலையில் ஆடிப்பெருக்கை ஒட்டி, வரும் 3ம் தேதி, அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களில், கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ஆடிப்பெருக்கு தினத்தன்று, பத்திரப் பதிவுகளுக்கான தேவை அதிகரிக்கும் நிலையில், பொதுமக்களுக்கான, 'டோக்கன் ' எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் டோக்கன்கள் அதன்படி, ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில், 100க்கு பதிலாக, 150 பத்திரங்கள் பதிவு செய்யும் வகையில் டோக்கன்களும், இரண்டு சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில், 200க்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்படும். மேலும், அதிகளவில் ஆவண பதிவுகள் நடக்கும் 100 அலுவலகங்களில், 150 டோக்கன்களும், ஏற்கனவே வழங்கப்படும், 12 தத்கால் பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக நான்கு டோக்கன்களும் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-perukku-additional-tokens-allocated-for-document-registration




