சென்னை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது; ”கூட்டணி ஆட்சிக்கு திமுக தயார் என்று அறிவித்திருந்தால், கூட்டணி கட்சிகளின் உணர்வுகளை மதித்து அவர்கள் விரும்பிய எண்ணிக்கையை ஓரளவிற்காவது திருப்திகரமான முறையிலேயே தந்திருந்தால், விரும்பிய தொகுதிகளை தந்திருந்தால் இவ்வளவு பெரிய பின்னடைவை சந்திருக்க வாய்ப்பு இல்லை. அதைவிட இந்த கட்சிகள் அவ்வளவு வேகமாக வெளியேற வாய்ப்பு இல்லை. இந்த கோணத்தில் யாரும் சிந்திக்கல. துரோகம் பண்ணிட்டாங்க எனச் சொல்றாங்க., துரோகம் பண்ண என்ன இருக்கு. நாளைக்கு கூட நாம் அமைச்சர் பதவியில் இருந்து வெளியேற முடியும். பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால், அதை தக்கவைப்பதற்கான அணுகுமுறையைத்தானே எடுப்பார்கள். த.வெ.க.-வுக்கு ஆதரவு, அமைச்சர் பதவி. அப்படி என்றால் த.வெ.க. அரசை புகழ்ந்து பாடிக் கொண்டே இருப்போம். இப்படித்தானே சராசரி மனிதன் முடிவு எடுக்கனும். அதைத் தாண்டி பாஜக-வுக்கு எதிராக எல்லா கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற பார்வையை திருமாவளவன் முன் வைக்கிறான் என்றால், இந்த பார்வையை நீங்கள் பாராட்ட வேண்டாமா? வரவேற்க வேண்டாமா? ஒரு அட்டாச்சுடு இல்லாமல் இவன் ஏன் இப்படி பேசுகிறான் என்றால், திமுக-வில் மீண்டும் ஒட்டிக்கொள்ள நினைக்கிறான் என்கிறார்கள். திமுகவுடன் ஒட்டிக்கொள்ள தேவை என்ன வந்தது? அர்த்தம் இல்லாத விமர்சனம் அது.” இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/if-the-dmk-had-announced-its-readiness-for-a-coalition-government-thirumavalavans-interview




