மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜையில் பங்கேற்க பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. யாக சாலை பூஜைகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் கடந்த 6-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் காலை வரை நடந்தது. தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான முதல்கால யாகசாலை பூஜைகள் கோவில் வடக்காடி வீதியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. அங்கு 108 மூலிகைகளால் ஹோமம் வளர்க்கப்பட்டு 400 சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்கப்பட்டன. முடிவில் மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. விஷேச சந்தி, விக்னேசுவர பூஜை, புண்யாகவாசனம், 2-ம் கால யாக வேள்வி, தீபாராதனை உள்ளிட்டவை நடந்தன. மாலையில் 3-ம் கால யாக சாலை பூஜைகள் 4 மணிக்கு மேல் தொடங்கியது. அதில் வேதபாராயணம், திருமுறை பாராயணத்தை ஓதுவார்கள் பாடினார்கள். பின்பு விக்னேசுவர பூஜை, புண்யாகவாசனம், 3-ம் கால யாக வேள்வி, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று காலையில் 4-ம் கால யாகசாலை பூஜை தொடங்கி நடைபெற்று வருகிறது. யாகசாலை பூஜை பக்தர்கள் தரிசனம் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெறும் யாக சாலை பூஜைகளில் பங்கேற்பதற்காக பக்தர்கள் சாரை சாரையாக கோவிலுக்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பூஜைகளை கண்டு தரிசனம் செய்கின்றனர். யாகசாலையில் விநாயகர், முருகன், சிவன்-பார்வதி, கிளி வாகனத்தில் மீனாட்சி அம்மன் போன்ற சுவாமிகளை மீனாட்சி கோவில் சுவாமிநாதன் பட்டர் அலங்காரம் செய்து அழகுற வைத்திருந்தார். மூலவர் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்திகளை பக்தர்கள் தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 4 ஆடி வீதிகளில் பாதுகாப்புக்காக 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/devotional/meenakshi-amman-temple-kumbabishekam-devotees-throng-yagasalai-puja




