மான்செஸ்டர், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் சாம் கரன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 19 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. இறுதியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் 1 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டை எட்டினார். டி20 போட்டியில் 100 விக்கெட்டை கைப்பற்றிய முதல் இந்திய சுழற்பந்து வீரர் என்ற சாதனையை அக்சர் படேல் படைத்தார். ஒட்டுமொத்த இந்திய பந்துவீச்சாளர்களில் 4-வது இடம் அவருக்கு கிடைத்தது.இந்தப் பட்டியலில் அர்ஷ்தீப்சிங் (134 விக்கெட்), பும்ரா (121), ஹர்திக் பாண்ட்யா (114) ஆகியோருக்கு அடுத்து அக்சர் படேலும் இணைந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/t20-against-england-axar-patels-record-breaking-feat




