சென்னை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள 4,260 அடுக்குமாடி குடியிருப்புகள் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.525.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4,260 அடுக்குமாடிக் குடியிருப்புகள், சென்னை வளர்ச்சி குழுமத்தின் சார்பில் பெரம்பூரில் ரூ.1.43 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் கல்லூரி குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் ஆகியவற்றை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் திறந்து வைத்தார். காணொலி காட்சி தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் கீழ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 525.75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4,260 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சென்னை வளர்ச்சி குழுமத்தின் சார்பில் பெரம்பூரில் 1.43 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் கல்லூரி குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் ஆகியவற்றைக் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய புதிய குடியிருப்புகளைத் திறந்து வைத்தல் 500 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின்கீழ், சென்னை மாவட்டத்தில் மறுகட்டுமான திட்டத்தின்கீழ், காந்தி நகர் திட்டப்பகுதியில் 85.55 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 500 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள். திருவள்ளூர் மாவட்டம், பூச்சி அத்திப்பேடு திட்டப்பகுதியில் 156.14 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1,152 அடுக்குமாடிக் குடியிருப்புகள்; ஈரோடு மாவட்டம், மோதூர் திட்டப்பகுதியில் 45.46 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 516 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் ஒடையாக்கவுண்டன்பாளையம் திட்டப்பகுதியில் 40.52 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 384 அடுக்குமாடிக் குடியிருப்புகள். தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை நல்லம்பள்ளி திட்டப்பகுதியில் 57.67 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 528 அடுக்குமாடிக் குடியிருப்புகள்: புதுக்கோட்டை மாவட்டம், ரெங்கம்மாள் சத்திரம் திட்டப்பகுதியில் 60.19 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 528 அடுக்குமாடிக் குடியிருப்புகள்; தேனி மாவட்டம், உத்தமபுரம் திட்டப்பகுதியில் 39.14 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 336 அடுக்குமாடிக் குடியிருப்புகள். நீலகிரி மாவட்டம், நடுஹட்டி திட்டப்பகுதியில் 22.16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 164 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் சேரங்கோடு திட்டப்பகுதியில் 18.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 152 அடுக்குமாடிக் குடியிருப்புகள். 9 திட்டப்பகுதிகள் என மொத்தம் 9 திட்டப்பகுதிகளில் 525.75 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 4,260 அடுக்குமாடிக் குடியிருப்புகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். இப்புதிய குடியிருப்புகள், ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், தார் சாலை வசதி, குடிநீர்வசதி, கழிவு நீரகற்று வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. பெரம்பூரில் புதிய குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் திறந்து வைத்தல் பேருந்து நிறுத்தம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் பெரம்பூரில் 1.43 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் கல்லூரி குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். இப்பேருந்து நிறுத்தத்தில் 45 நபர்கள் அமரும் வகையில் காத்திருப்பு அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கண்காணிப்பு கேமராக்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிவறைகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அமைச்சர்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் கு.ப.கிருஷ்ணன், தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் இரா. கிர்லோஷ் குமார், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் ஏ.ஆர். ராகுல்நாத், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் பெ.ரமண சரஸ்வதி, ஆகியோர் கலந்து கொண்டனர். உயர் அலுவலர்கள் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சட்டமன்ற உறுப்பினர் ஆர். ரமேஷ் குமார், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. கவிதா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநர் அனாமிகா ரமேஷ். மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/4260-urban-apartments-inaugurated-by-chief-minister




