திருச்சி, உறையூர், பாண்டமங்கலம், காவல்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் மைதீன் (வயது: 22). இவர், உறையூர் பகுதியைச் சேர்ந்த ஒரு 17 வயது சிறுமியைக் கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். பின்னர், அந்தச் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி வேளாங்கண்ணிக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். பின்னர், ஊருக்குத் தெரியாமல் மைதீனும், அந்தச் சிறுமியும் அவரவர் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதற்கிடையே, மைதீன் அந்தச் சிறுமியைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றும் வேறு பகுதியில் வைத்தும் அந்தச் சிறுமியுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில், அந்தச் சிறுமி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். திருச்சி இந்நிலையில், சிறுமியின் உடலில் மாற்றங்கள் தென்படுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இது பற்றி குழந்தைகள் நலக்குழுவில் புகார் அளித்தனர். பின்னர், அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருவரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் மைதீன் மீது போக்சோ உள்ளிட்ட பதிவுகளை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி: டிப்பர் லாரி முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை; இளைஞரின் பின்னணி குறித்து போலீஸ் விசாரணை முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/crime/trichy-22-year-old-man-arrested-for-marrying-minor-girl-and-sexually-assaulting-her




