தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று, வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் நோக்கில் ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ நடைபெறவுள்ளது. இம்மாநாட்டைத் தொடங்கி வைத்து சிறப்பிக்குமாறு, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா நேரில் சந்தித்து முறைப்படி அழைப்பு விடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், `` மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்து, நடைபெறவுள்ள ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ தொடர்பான பணிகளை விளக்கி, மாநாட்டைத் தொடங்கி வைத்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பு விடுத்தேன். அமைச்சர் கீர்த்தனா - முதல்வர் விஜய் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்கள் ஒன்றிணையும் முக்கிய தளமாக இம்மாநாடு அமையவுள்ளது. தமிழ்நாட்டின் மீது உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, ஒவ்வொரு முதலீட்டையும் மக்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்பாக மாற்றும் நமது பயணத்தில், ‘வெற்றி தமிழ்நாடு 2026’ ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார். “ரீல்ஸ் போடுவதை நிறுத்திவிட்டேன்!” - அமைச்சர் கீர்த்தனா ‘ஓப்பன் டாக்’ முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/governance/the-vetri-tamil-nadu-2026-investors-conference-is-set-to-take-place-in-tamil-nadu-tomorrow



