திருச்சி, திருச்சி கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக சில ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதோடு, சில ரெயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்விவரம் வருமாறு:- திருச்சியில் காலை 8.40 மணிக்கு புறப்படும் திருச்சி காரைக்கால் டெமு ரெயில் (எண்: 76820) நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 21-ந்தேதி வரை (19-ந்தேதி தவிர) திருவாரூர் வரை மட்டுமே இயங்கும். மேற்கண்ட நாட்களில் இந்த ரெயில் காரைக்கால் செல்லாது. மறுமார்க்கத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 21-ந்தேதி வரை (19-ந்தேதி தவிர) காரைக்காலில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்படவேண்டிய காரைக்கால் - திருச்சி டெமு ரெயில் (எண்: 76819) திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி வந்தடையும். அந்த நாட்களில் காரைக்காலில் இருந்து புறப்படாது. இதேபோல் திருச்சியில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்படும் திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் (எண்:56700) நாளை முதல் வருகிற 20-ந்தேதி வரை ஆடுதுறை வரை மட்டுமே செல்லும். மேற்கண்ட நாட்களில் மயிலாடுதுறைக்கு செல்லாது. மயிலாடுதுறையில் இருந்து பகல் 12.35 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (எண்: 16847) நாளை முதல் வருகிற 20-ந்தேதி வரை மயிலாடுதுறையில் இருந்து புறப்படாது. அதற்கு பதிலாக ஆடுதுறையில் இருந்து பகல் 12.58 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டைக்கு செல்லும். மேலும் நாளை முதல் வருகிற 21-ந்தேதி வரை (19-ந்தேதி தவிர) காரைக்கால்-தஞ்சை பயணிகள் ரெயில் (எண்: 56817) தகுந்த இடங்களில் 20 நிமிடம் நின்று தாமதமாக செல்லும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-karaikal-mayiladuthurai-train-services




