தென்காசி, கடையநல்லூர் அருகே கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகளால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். வனவிலங்குகள் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வடகரை, அச்சன்புதூர், நெடுவயல் மற்றும் சுற்றுவட்டார மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் யானை, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதில் யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விளைநிலங்கள், தென்னைகளை சேதப்படுத்தி செல்வது வழக்கமாக உள்ளது. கிராமத்தில் புகுந்த யானைகள் இந்த நிலையில் இன்று காலையில் கடையநல்லூர் அருகே உள்ள நெடுவயல் கிராமத்திற்குள் வனப்பகுதியில் இருந்து வந்த 2 யானைகள் புகுந்தன. அவை அங்குள்ள குளத்தில் கும்மாளமிட்டு கொண்டு இருந்தது. அப்போது. அந்த வழியாக சென்ற விவசாயிகள், பொதுமக்கள் பார்த்து திடுக்கிட்டு, அலறியடித்து ஓடினார்கள். பின்னர் அந்த காட்டு யானைகள் அங்கிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள தென்னந்தோப்பில் புகுந்தன. பொதுமக்கள் செல்ல தடை தகவல் அறிந்த கடையநல்லூர் வனத்துறையினர், அச்சன்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் யானைகள் நடமாடும் பகுதிக்கு பொதுமக்கள் செல்லாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் அச்சன்புதூர் - தென்காசி சாலையில் போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர், காவல்துறையினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு, யானைகள் வேறு பகுதிகளுக்குள் செல்லாமல் தடுக்க தோட்டத்தைச் சுற்றி தீவிர பாதுகாப்பு பணியில் மாலை வரை ஈடுபட்டனர். பள்ளிக்கு விடுமுறை இதன் காரணமாக அந்த பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மதியத்திற்கு பிறகு விடுமுறை விடப்பட்டது. உயர் மின் அழுத்த கம்பிகளில் யானையின் துதிக்கை மற்றும் முதுகு பகுதி உரசி விபரீதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அந்த பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இரவு நேரத்தில் யானைகளை பாதுகாப்பாக மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-wild-elephants-enter-village-panic-among-residents




