நீலகிரி, கூடலூர் பகுதியில் போதிய மழை பெய்யாததால், ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் உள்ளது. நீர்வரத்து குறைந்தது நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். நடப்பு ஆண்டில் மழையின் அளவு குறைவாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. கடந்த சில நாட்களாக பெய்யும் மழை அளவு குறைந்துள்ளது. வழக்க மாக பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததாலும், நடப்பு வாரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும் இப்பகுதியில் உள்ள முக்கிய ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும் நிலை காணப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாடு அபாயம் இதேபோல் குடிநீர் வழங்கும் முக்கிய ஆறுகளில் தண்ணீர் வரத்து அடி யோடு சரிந்துள்ளது. பாண்டியாறு, மாயாறு, சோலாடி, பொன்னானி உள் பட ஆறுகளில் பாறைகள் வெளியே தெரியும் அளவுக்கு நீர்வரத்து குறைந்து உள்ளதால், வரும் காலங்களில் கடுமையான குடிநீர் தட்டுப் பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப் படும் நாட்களின் இடைவெளி அதிகரிக்க தொடங்கியுள்ளது. நீர்வரத்து இதேபோல் தொடர்ந்து குறைந்தால், பொதுமக்களுக்கு தடையின்றி குடி நீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படக்கூடும். இதனால் தங்களுக்கு வினியோ கிக்கப்படும் குடிநீரை வீணடிக்காமல் மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே நீரை சேமித்து வைக்க வேண்டும் என நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் தரப் பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. மழையின்றி ஆறுகள் வறண்டு வருவதால், கூடலூர் பகுதி பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/low-water-inflow-into-rivers-in-the-nilgiris-due-to-insufficient-rainfall-risk-of-drinking-water-shortage




