சென்னை, விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், செங்கமலப்பட்டி பகுதியில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிதியுதவியை முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;- 4 பேர் உயிரிழப்பு விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், செங்கமலப்பட்டி பகுதியில் நேற்று (26.07.2026) காலை தனியாருக்குச் சொந்தமான இடத்தில் முறையான அனுமதி பெறாமல் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ராம்பிரகாஷ் (வயது 32), ராமச்சந்திரன் (வயது 40), இன்னாசிமுத்து (வயது 44) மற்றும் நாரணாபுரத்தைச் சேர்ந்த பாண்டித்துரை (வயது 35) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். ரூ. 4 லட்சம் நிவாரணம் இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா நான்கு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். நடவடிக்கை மேலும், முறையான அனுமதி பெறாமல் சட்டத்திற்குப் புறம்பாக பட்டாசு ஆலைகள் நடத்தப்படுகின்றனவா என்பதனை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/4-killed-in-sivakasi-firecracker-factory-explosion-chief-minister-vijay-announces-relief




