சென்னை, தலைநகரில் 180-க்கும் மேற்பட்ட சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளிகளைக் குறிவைத்து காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக தவெக ஐ.டி. விங் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில், தலைநகரில் 180-க்கும் மேற்பட்ட சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளிகளைக் குறிவைத்து காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆட்சியில் தலைநகரில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்துக் கிடந்தது அனைவரும் அறிந்ததே! நடவடிக்கை அதனைச் சீரமைக்க, பதவியேற்ற நாள் முதலே போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் படை, சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை, சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளிகளைக் கண்காணித்தல் மற்றும் கைது செய்தல் என பல்வேறு நடவடிக்கைகளை, காவல்துறையை காவல்துறையாக செயல்படவிட்டு, முதல்-அமைச்சர் மேற்கொண்டு வருகிறார். குற்றங்களைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், அவை நிகழ்வதற்கான காரணிகளைக் கண்டறிந்து களைவது, போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு என அனைத்திலும் துரித நடவடிக்கைகளுடன், குற்றங்களை உளவியல் ரீதியாக அணுகும் முயற்சிகளையும் காவல்துறை மூலமாக முன்னெடுத்து வருகிறார். முதல்-அமைச்சர்! சட்டம்-ஒழுங்கைக் காப்பதிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிலும் எந்த சமரசமும் இல்லை என்ற உறுதியோடு செயல்பட்டு வருகிறார் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-restore-degraded-law-and-order-tvk-it-wing




