‘வெல்கம் டு வைல்டுலைப்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவராஜ்குமார் மற்றும் கீதா சிவ ராஜ்குமார் இணைந்து வெளியிட்டனர். கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார், 1974-ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்ரீனிவாச கல்யாணம்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதுவரை 120-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் அபிஷன் ஜீவிந்த் உடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். சிவராஜ்குமார், கார்த்திக் ராஜு இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு சிவராஜ்குமார் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. தமிழில், ‘திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’, தெலுங்கில் ‘நினு வீதனி நீ தானு நேனே’, ‘சிங்கிள்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு, அடுத்து இயக்கும் படம் ‘வெல்கம் டு வைல்டுலைப்’. இதில் சிவராஜ்குமார் ஹீரோவாக நடிக்கிறார். கன்னடத்தில் உருவாகும் இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை கேவிகே புரொடக்ஷன்ஸ் சார்பில் குடிபுடி விஜய் குமார் தயாரிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவராஜ்குமார் மற்றும் கீதா சிவ ராஜ்குமார் இணைந்து வெளியிட்டனர். இந்த போஸ்டரில் சிவராஜ்குமார் இதுவரை இல்லாத புதிய தோற்றத்தில், இளமையான கெட்டப்பில் காட்சியளிக்கிறார். ஒரு கையில் கேமராவையும், மற்றொரு கையில் சிங்கக் குட்டியையும் ஏந்தியிருக்கும் அவரது தோற்றம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இப்படத்தின் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு தொடக்கம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. Jai Sairam "Dreams do come true! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/shivarajkumars-welcome-to-wild-life-first-look-poster-out




