சென்னை, சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப நாள் தோறும் தங்கத்தின் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த 10-ந்தேதி கிராம் ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரன் ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர், தங்கம் விலை ஏற்றத்துடனே பதிவாகி வந்தது. இந்த நிலையில், கடந்த 18-ந்தேதி கிராம் ரூ.14 ஆயிரத்து 290-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செயப்பட்டது. நேற்று விலை சற்று குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14 ஆயிரத்து 205 எனவும், சவரனுக்கு ரூ.680 சரிந்து ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 640-க்கும் விற்பனை ஆனது. பின்னர் மாலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,15,200க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.195 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,400க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,16,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை வெள்ளி விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.250-க்கும், கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-have-surged-sharply-what-is-the-situation-today-3




