இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படத்தை நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பாராட்டியுள்ளார். ‘டோரதி’ திரைப்படம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கியுள்ள இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் உருவான ‘டோரதி’ திரைப்படம் கடந்த 25-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை 1990-களின் பின்னணியில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள ‘டோரதி’, சாதி சார்ந்த வன்முறை மற்றும் இரு நண்பர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகும் 10-வது திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது. திரைப்பிரபலங்கள் பாராட்டு வெளியானது முதலே ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷின் நடிப்பும் பாராட்டுகளை பெற்று வரும் நிலையில், திரையுலகைச் சேர்ந்த பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். நடிகர் தனுஷ், நடிகை ஸ்ரீலீலா, இயக்குநர் மணிரத்னம், இயக்கநர் தமிழரசன் பச்சமுத்து, சூர்யா உள்ளிட்டோரும் ‘டோரதி’ படத்தை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கவனமும் மேலும் அதிகரித்துள்ளது. இளையராஜா இசையில் வெளியாகியுள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், துணிச்சலான கதைகளத்தால் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. திரையுலகம் சொல்ல மறந்த உன்னதப் படைப்பு இந்த நிலையில், ‘டோரதி’ திரைப்படம், திரையுலகம் சொல்ல மறந்த உன்னதப் படைப்பு எனக் கூறி நடிகர் விஜய் ஆண்டனி இன்று தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “டோரதி மிக மிக சிறப்பான படம். திரையுலகம் சொல்ல மறந்த உன்னதப் படைப்பு. இந்தப் படத்தில் உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார். ‘டோரதி’ படம் 7 நாட்களில் ரூ.8 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாழ்த்துக்கள்.#டோரதி மிக மிக சிறப்பான படம். திரையுலகம் சொல்ல மறந்த உன்னதப் படைப்பு. இந்தப் படத்தில் உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/vijay-antony-praises-the-dorathy-film-masterpiece-that-the-film-industry-forgot-to-mention



