ஹூஸ்டன், 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 32 அணிகள் 2-வது சுற்றுக்கு (நாக்-அவுட்) முன்னேறின. உள்ளூர் நேரப்படி நேற்றுடன் 2-வது சுற்று நிறைவடைந்தன. இதன் முடிவில் 16 அணிகள் 3-வது சுற்றுக்கு வந்துள்ளன. இந்த நிலையில் 3-வது சுற்று போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி ஹூஸ்டன் நகரில் இன்றிரவு 10.30 மணிக்கு நடக்கும் 3-வது சுற்றின் முதல் ஆட்டத்தில் மொராக்கோ- கனடா அணிகள் பலப்பரீட்சை நடத் துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி காலிறுதிக்கு முன்னேறும். இந்திய நேரப்படி நாளை அதிகாலை 2.30 மணிக்கு நடக்கும் 2-வது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பிரான்ஸ் அணி, பராகுவேயை எதிர்கொள்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/football/football-world-cup-third-round-matches-begin-today




