மும்பை, மராட்டிய மாநிலத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான பிஜேந்திர குப்தா தலைமறைவான நிலையில், அவரது மனைவி சுமனை போலீசார் கைது செய்துள்ளனர். வினாத்தாள் கசிவு மராட்டியத்தில் கடந்த மாதம் 28-ந்தேதி ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) நடைபெற இருந்தது. தேர்வுகளை மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் 1,028 தேர்வு மையங்களில் எழுத இருந்தனர். இதற்கிடையில், தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிந்துவிட்டதாக தானே மாவட்டத்தின் பிவண்டி நகர காவல்துறைக்கு 27-ந்தேதி காலை ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பிவண்டி நகர் பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், சில நபர்களிடம் இருந்து வினாத்தாள்கள் கைப்பற்றப்பட்டன. அந்த வினாத்தாள்களை உயர்மட்ட ஆய்வுக்கு அனுப்பியபோது, அவை அசல் வினாத்தாள்களுடன் ஒத்துப்போனதாக போலீசாருக்கு தெரியவந்தது. தேர்வு ஒத்திவைப்பு வினாத்தாளை கசியவிட்டதாக பிவண்டியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். வேறு இடத்தில் அச்சிடப்பட்ட வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே அவை கசியவிடப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 28-ந்தேதி நடைபெற இருந்த ஆசிரியர் தகுதி தேர்வை மாநில அரசு ஒத்திவைத்தது. மேலும் வினாத்தாள் கசிவு வழக்கு சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளி கைது இந்த வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி பிஜேந்திர குப்தா தலைமறைவான நிலையில், பீகாரில் தங்கியிருந்த அவரது மனைவி சுமன் குப்தாவை போலீசார் கைது செய்தனர். மேலும், ஆக்ராவில் உள்ள பிரிண்டிங் பிரஸ் ஊழியர்கள் 2 பேர் உள்பட, வினாத்தாள் கசிவில் தொடர்புடைய 12 பேரை அதிரடியாக கைது செய்த போலீசார், பிஜேந்திர குப்தாவை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் அவர் பீகாரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் நேற்று அதிகாலை நேரத்தில் சமஸ்திப்பூரில் உள்ள செர்புரில் பதுங்கியிருந்த பிஜேந்திர குப்தா மற்றும் அவரது கூட்டாளி இந்திரஜித் சிங்கை அதிரடியாக கைது செய்தனர். போலீசார் 2 பேரையும் பிவண்டி அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். இவர் ஏற்கனவே வேறு சில தேர்வுகளில் வினாத்தாள்களை கசியவிட்ட வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/maharashtra-tet-exam-paper-leak-case-key-accused-arrested-in-bihar




