பகத் பாசில் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பிக்னிக்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மலையாள நடிகர் பகத் பாசில் மற்றும் இயக்குநர் திலீஷ் போத்தன் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் புதிய மலையாள படம் ‘பிக்னிக்’. இந்தப் படத்தின் மூலம் பிரேமலு, பெத்லகேம் குடும்ப யூனிட் படங்களின் இணை எழுத்தாளர் கிரண் ஜோஷி இயக்குநராக அறிமுகமாகிறார். ஆழப்புலா ஜிம்கானா, படக்களம், எகோ போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான நடிகர் சந்தீப் பிரதீப் இந்தப் புதிய படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். திலீஷ் போத்தன், இந்திரஜித் சுகுமாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளபர். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார். இந்த நிலையில், மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் ‘பிக்னிக்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 2027 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 14 ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/sandeep-pradeeps-picnic-film-first-look-poster-out




