பிரிஸ்டல், இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. அத்துடன், தொடரையும் இழந்தது. இந்த நிலையில், தோல்விக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறியதாவது; இன்றைய போட்டி எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. 158 ரன்கள் என்பது கண்டிப்பாக போதுமானது கிடையாது. இங்கிலாந்து அணியினர் அந்த இலக்கை விரைவாக எட்டினார்கள். எனது ஆட்டம் எனக்கு மகிழ்ச்சி அளித்தது. ஆனால் எனது ஆட்டம் வெற்றிக்கு உதவவில்லை என்பதால், அதற்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுகிறது. நான் விளையாடும்போதெல்லாம் சிறப்பாகச் செயல்பட்டு, என் அணி வெற்றிபெறுவதை வைப்பதையே விரும்புகிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்று அது நடக்கவில்லை. அணியாக இது ஒரு மாற்றத்திற்கான காலகட்டம். பல இளம் வீரர்கள் இத்தகைய சூழலில் முதல்முறையாக விளையாடுகின்றனர். பல தவறுகளை அவர்கள் செய்துள்ளனர். வெளிநாட்டுச் சூழலுக்கு வரும்போது சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவதும், விழிப்புணர்வுடன் இருப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதைத் தவறுகள் அவர்களுக்கு நிச்சயமாக உணர்த்தும். தவறுகளிலிருந்து விரைவாகக் கற்றுக்கொள்வது முக்கியம். எங்களது வீரர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொண்டு, அடுத்த ஆட்டத்தில் இன்னும் வலுவாகத் திரும்புவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அடுத்த ஆட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.” இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/series-defeat-against-england-what-did-shreyas-iyer-say




