உத்தரப் பிரதேசம், அங்கித் பால்யன் ஏற்கனவே பாடியிருந்த ஒரு பாடலின் வரிகளைப் போலவே அவரது மரணம் அமைந்திருப்பதாக கூறப்படுவது இந்த சம்பவத்தை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஜிம்முக்கு வெளியே துப்பாக்கிச்சூடு உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் பிரபல ஹரியான்வி பாடகரும், யூடியூபருமான அங்கித் பால்யன் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷாம்லி மாவட்டத்தில் உள்ள சி.பி. குப்தா காலனி பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 26) இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கித் பால்யன் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுவிட்டு வெளியே வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த அங்கித் பால்யன், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பாடகர் மட்டுமின்றி பிரபல யூடியூபர் அங்கித் பால்யன் பாடகராக மட்டுமின்றி நடிகராகவும், யூடியூப் படைப்பாளராகவும் பிரபலமாக இருந்துள்ளார். அவரது யூடியூப் பக்கத்தில் பல லட்சம் பின்தொடர்பவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது திடீர் மரணம் ஹரியான்வி இசை மற்றும் சமூக வலைதள வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாடல் வரிகளை பிரதிபலித்த சம்பவம் மேலும், அங்கித் பால்யன் ஏற்கனவே பாடியிருந்த ஒரு பாடலின் வரிகளைப் போலவே அவரது மரணம் அமைந்திருப்பதாக கூறப்படுவது இந்த சம்பவத்தை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கொலையாளிகளுக்கு போலீசார் வலை இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/a-tragedy-mirroring-the-songs-lyrics-famous-singer-shot-dead-outside-the-gym




