சென்னை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது! முதல்வர் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி தமிழகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் அவர்களிடம் பேட்டி பெற முயன்ற பத்திரிக்கையாளர்களைத் தாக்கியதோடு, நாக்கைத் துருத்திக் கொண்டு அவர்களை “வாடா, போடா” என ஒருமையில் சாடியுள்ள, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. திபு அவர்களின் நாகரிகமற்ற செயல் கண்டனத்திற்குரியது. காக்கிச் சட்டைக்கென்று ஒரு தனி மரியாதையும், கண்ணியமும் உண்டு என்பதை மறந்து விட்டு, காவல்துறையின் உயரிய பொறுப்பில் இருக்கும் காவல் அதிகாரியே “பேட்டை ரவுடி” போல இப்படி பொதுவெளியில் சண்டைக்கு நிற்பது ஒட்டுமொத்த காவல்துறையின் பிம்பத்தையும் சிதைத்து விடும். ஏற்கனவே தமிழகத்தில் தொடரும் லாக்-அப் மரணங்களால், காவல்துறையின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையும், பாதுகாப்புணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து வரும் நிலையில், காவல்துறையினர் மிகுந்த கவனத்துடன் தங்களது “Decorum”-மை கடைபிடிக்க வேண்டும். மேலும், காவல்துறையைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்-அமைச்சர் விஜய், காவல்துறையை வெறும் “ஏவல்துறை”யாக மட்டும் பயன்படுத்தக் கூடாது எனவும், ஜனநாயகத்தின் முக்கியத் தூண்களில் ஒன்றான பத்திரிக்கைத் துறையின் அடிப்படை உரிமைகள் மீது தொடரும் இதுபோன்ற அடக்குமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/addressing-journalists-in-a-disrespectful-singular-tone-police-personnel-must-not-compromise-on-dignity-nainar-nagendran




