சேலம், கள்ளச்சாராய வேட்டைக்கு சென்ற போது போலீசார் பயணித்த டெம்போ வாகனம் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இன்ஸ்பெக்டர் உட்பட 18 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று காலை 8.30 மணி அளவில் இன்ஸ்பெக்டர் ஆனந்தநாயகி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வனத்துறையினர் என மொத்தம் 18 பேர், போலீஸ் டெம்போ வாகனத்தில் சோதனைக்காக புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் ஏற்காடு குண்டூர் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வாகனத்தின் பிரேக் செயலிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மலைப்பாதையில் தாறுமாறாக சென்று தலைகீழாகக் கவிழ்ந்தது. விபத்தில் வாகனத்தில் இருந்த போலீசார், வனத்துறையினர் மற்றும் இன்ஸ்பெக்டர் உட்பட அனைவரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காயமடைந்தவர்களுக்கு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணை இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏற்காடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளச்சாராய வேட்டைக்குச் சென்ற போலீஸ் வாகனமே விபத்தில் சிக்கிய சம்பவம் ஏற்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/police-vehicle-on-a-bootleg-liquor-hunt-overturns-and-causes-accident-18-people-including-an-inspector-injured




