சென்னை, பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ள புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா மற்றும் திரிஷாவிடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி, வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகராக திகழ்கிறார். காதல், ஆக்ஷன், கமர்ஷியல் மற்றும் வரலாற்றுப் படங்கள் என பல்வேறு வகை திரைப்படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான 'வா வாத்தியார்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. கைவசம் அடுத்தடுத்த படங்கள் தற்போது கார்த்தி, 'சர்தார் 2', 'மார்ஷல்', 'கைதி 2' உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே, இயக்குநர் மோகன் ராஜா இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். முதல் முறையாக கார்த்தி - மோகன் ராஜா கூட்டணி 'தனி ஒருவன்', 'வேலைக்காரன்' போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய மோகன் ராஜா, கடைசியாக மலையாள வெற்றிப்படமான 'லூசிபர்' திரைப்படத்தை தெலுங்கில் 'காட் பாதர்' என்ற பெயரில் இயக்கியிருந்தார். இப்போது முதன்முறையாக கார்த்தியுடன் அவர் இணையும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை இந்த நிலையில், படத்தின் கதாநாயகி தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கார்த்தி - நயன்தாரா கூட்டணி இதற்கு முன்பு 'காஷ்மோரா' திரைப்படத்தில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. அதேபோல், மோகன் ராஜாவும் நயன்தாராவும் 'தனி ஒருவன்', 'வேலைக்காரன்', 'காட் பாதர்' ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். மாற்று தேர்வாக திரிஷா? ஒருவேளை நயன்தாராவின் கால்ஷீட் கிடைக்காத பட்சத்தில், நடிகை திரிஷாவை கதாநாயகியாக தேர்வு செய்யவும் படக்குழு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி நடந்தால், 'பொன்னியின் செல்வன்' படத்திற்குப் பிறகு கார்த்தி - திரிஷா கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/new-film-from-the-mohan-raja-karthi-duo-is-she-the-female-lead




