பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற பிரஜித் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தன்னிடம் செல்லுபடியாகும் ஓசிஐ (OCI) அட்டை உள்ளது. நீட் யூஜி 2026 தேர்வில் பங்கேற்று தகுதி பெற்றுள்ளேன். இதனால் அகில இந்திய இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளேன். ஆனால், கலந்தாய்வுக்கான ஆன்லைன் பதிவின்போது கவனக்குறைவாக ‘Foreign National (Other than OCI)’ என்ற பிரிவைத் தேர்வு செய்துவிட்டேன். அதற்கு பதிலாக ‘OCI’ பிரிவைத் தேர்வு செய்திருக்க வேண்டும். பின்னர் இந்தத் தவறைச் சரிசெய்ய முயன்றபோது, MCC இணையதளத்தில் OCI அட்டையைப் பதிவேற்றுவதற்கான வசதி இல்லை. எனவே, ‘Foreign National’ பிரிவை ‘OCI’ என மாற்றி, உரிய ஆவணங்களைப் பதிவேற்றும் வகையில் இணையதளத்தை மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கௌரி முன்பு விசாரணைக்கு வந்தது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பேசும் போது, “மத்திய அரசு மற்றும் மருத்துவக் கலந்தாய்வுக்குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவர்கள் பதிவு செய்யும்போது தங்களது விவரங்களை அவர்களே பதிவு செய்வதால், மருத்துவக் கலந்தாய்வுக்குழு தன்னிச்சையாக ஒரு மாணவரின் பிரிவை மாற்ற முடியாது. நீட் தேர்வு நீதிமன்றம் அனுமதித்தால், மாணவரின் பிரிவை மாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். மேலும், OCI பிரிவைக் கோரும் மாணவர், MCC இணையதளத்தில் உரிய ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும், அவற்றை NRI ஆய்வுக்குழு பரிசீலித்த பின்னரே அடுத்தகட்ட கலந்தாய்வு நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்” என்று தெரிவித்தனர். NEET போராட்டம்: `அமித் ஷா விளக்கம் தர ரெடி; ஆனால், ஒரு கண்டிஷன்!' - ரிஜிஜு சொல்வதென்ன? இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “இது ஒரு மாணவரின் கல்வி எதிர்காலம் தொடர்பான விவகாரம் என்பதைக் கருத்தில் கொண்டு, மனுதாரருக்கு உரிய வாய்ப்பு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி, மருத்துவக் கலந்தாய்வுக்குழு இணையதளத்தைத் திறந்து, மனுதாரர் OCI பிரிவைக் கோருவதற்கான உரிய ஆவணங்களைப் பதிவேற்ற அனுமதிக்க வேண்டும். மாணவர் ஆவணங்களைப் பதிவேற்றிய பின்னர், அவற்றை NRI ஆய்வுக்குழு பரிசீலிக்க வேண்டும். உத்தரவு எனவே, ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான இணையதள வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். MCC இணையதளத்தில் OCI அட்டையைப் பதிவேற்றுவதற்கான வசதி இல்லை. எனவே, ‘Foreign National’ பிரிவை ‘OCI’ என மாற்றி, உரிய ஆவணங்களைப் பதிவேற்றும் வகையில் இணையதளத்தை மீண்டும் திறக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். NEET -க்கு எதிராக 12 நாள் பட்டினி போராட்டம். நம்ம புள்ளைகளுக்காகத்தான்! - வெற்றிமாறன் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/judiciary/high-court-orders-opportunity-for-student-to-change-incorrectly-selected-category-in-neet-counselling



