ஆக்லாந்து, அடுத்த மாதம் தொடங்கவுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்துக்கான டிக்கெட் விற்பனை தொடங்கி 2 வாரங்களிலேயே 50,000-க்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. 12 சர்வதேச போட்டிகள் 6 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, அங்கு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் என மொத்தம் 12 சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறது. நியூசிலாந்து மண்ணில் ஒரே சுற்றுப்பயணத்தில் வெளிநாட்டு அணி 12 சர்வதேச போட்டிகளில் விளையாடுவது இதுவே முதல் முறையாகும். இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி அக்டோபர் 22-ம் தேதி கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது. அடுத்தடுத்த டி20 போட்டிகள் அக்டோபர் 24, 27, 30 மற்றும் நவம்பர் 1-ம் தேதிகளில் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் நவம்பர் 4, 7, 10, 13 மற்றும் 15-ம் தேதிகளில் நடைபெறுகின்றன. டெஸ்ட் போட்டிகள் வெலிங்டனில் நவம்பர் 19 முதல் 23-ம் தேதி வரையும், கிறைஸ்ட்சர்ச்சில் நவம்பர் 27 முதல் டிசம்பர் 1-ம் தேதி வரையும் நடைபெற உள்ளன. 2-வது டி20 கிரிக்கெட் நேஷன்'உறுப்பினர்கள், 'ஸ்கை' மற்றும் 'ஏஎன்இசட்' வாடிக்கையாளர்களுக்கான இரண்டு வார முன்பதிவு காலக்கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து, திங்கள்கிழமை முதல் பொதுமக்களுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது இந்நிலையில், டிக்கெட் விற்பனை தொடங்கி 2 வாரங்களிலேயே 50,000-க்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. குறிப்பாக கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற உள்ள 2-வது டி20 போட்டிக்கான டிக்கெட்டுகளில் 75 சதவீதம் ஏற்கனவே விற்று தீர்ந்துள்ளன. கூடுதல் இருக்கைகள் இதில் ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகரித்துள்ளநிலையில், 2019-ம் ஆண்டு இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதற்குப் பிறகு முதல்முறையாக, மைதானத்தின் 6-வது அடுக்கு இருக்கைகள் ரசிகர்களுக்காக திறக்கப்பட உள்ளன. 4-வது டி20 போட்டி அக்டோபர் 30-ம் தேதி ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/indias-tour-of-nz-ticket-sales-soar-past-50000




