சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் சவுக்கு சங்கர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில், சவுக்கு சங்கர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதித்துறை நடுவர் சிவசக்தி உத்தரவிட்டார். 30 நாட்கள் அவகாசம் மேலும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு சவுக்கு சங்கருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்துக்குள் அவர் மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள தகவல் அவரது ஆதரவாளர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/chavukku-shankar-sentenced-to-3-years-in-prison-court-verdict




