உசிலம்பட்டி தொகுதி தவெக எம்.எல்.ஏ விஜய் மகாலிங்கம் மதுரை மாவட்ட எஸ்பி-யை நேற்று சந்தித்து மனு ஒன்றை வழங்கினார். அதில்," தொகுதியில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு, நேரில் சந்திக்கும் நிகழ்வுகளின் போது, சிலர் இடையூறு ஏற்படுத்த முயற்சிப்பதுடன், ஏற்கெனவே நிலவி வரும் முன்விரோதம் மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது பழிவாங்கும் நோக்கில் சில சூழ்ச்சிகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் காரணமாக எனது உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, நான் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு, மக்களைச் சந்திக்கும் நிகழ்வுகளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில், எனக்கு தனிப்பட்ட காவல் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளர். தவெக எம்.எல்.ஏ விஜய் மகாலிங்கம் தவெக எம்எல்ஏ-க்களுடனான குதிரை பேர விவகாரத்தில் உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏ விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மதுரையைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார். இந்த சூழலில் அரசியல் காழ்புணர்ச்சியால் தன்னை பழி வாங்கும் நோக்கில் சூழ்ச்சி நடைபெறுவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/madurai-tvk-mla-submits-petition-seeking-protection-due-to-threat-to-life




