சென்னை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோவில்களின் நிர்வாகம், கோவில் சொத்துகள் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு பல்வேறு முக்கிய உத்தரவுகளையும், அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;- “கோவில்களில் நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும். கோவில் சொத்துகளை அபகரிக்கும் முயற்சிகளை அனுமதிக்க கூடாது. கோவில் நிலங்கள் அபகரிப்பு தொடர்பாக உடனடியாக முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்ய வேண்டும். மேலும் இதுகுறித்து அமைச்சர், ஆணையரின் கவனத்திற்கு அதிகாரிகள் உடனடியாக கொண்டு வர வேண்டும். கோவில்களில் பக்தர்கள் சீரான தரிசனத்தை உறுதி செய்ய வேண்டும். அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள் மீது சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/attempts-to-usurp-temple-properties-must-not-be-allowed-hrce-minister-ramesh-orders-officials




