Full artikkel
புனேயில் கடந்த 18-ம் தேதி ஷியா கோயல் என்ற பெண் தனது வருங்கால கணவர் கேதன் அகர்வாலை தனது காதலன் துணையோடு மலை உச்சியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஷியா கோயல் மற்றும் அவரது காதலன் சேதன் செளதரி ஆகிய இருவரையும் நேற்று சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸார் அழைத்து சென்றனர். அங்கு இருவரும் எப்படி கொலை செய்தனர் என்பதை செய்து காட்டினர். ஷியாதான் இக்கொலைக்கு தனது காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் ஷியாவிடம் விசாரணை நடத்தியதில் கேதன் அகர்வாலுடன் பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானுக்கு தனது காதலன் சேதன் செளதரியுடன் சென்று சில நாட்கள் தங்கிவிட்டு வந்தது தெரிய வந்துள்ளது. அதோடு சமூக ஊடகங்களில், கேதன் மற்றும் ஷியா ஆகியோர் வெளியிட்ட ரீல்கள், பதிவுகள் மற்றும் கதைகள் அவர்கள் ஜோடிகள் என்பதை வெளியுலகிற்கு காட்டியது. ஆனால் அந்த பாசத்திற்கு பின்னால் ஷியாவின் கொலை சதித்திட்டம் மறைந்து இருந்தது. ஷியாவிடம் நடத்திய விசாரணையில், அவர் கேதன் அகர்வாலை திருமணம் செய்து கொள்ள விரும்பியதில்லை என்று தெரிவித்துள்ளார். அதோடு கேதன் அகர்வாலை கொலை செய்துவிட்டால், அடுத்த மூன்று ஆண்டுகள் கழித்து சேதன் செளதிரியை திருமணம் செய்து கொள்ள முடியும் என்று நம்பியதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஷியா கோயல் ஷாப்பிங் என்ற பெயரில் கேதன் அகர்வாலிடம் இருந்து ரூ.1 கோடியை வாங்கியதாக தெரிகிறது. அதை அவர் நேரடியாக சேதனிடம் வழங்கியுள்ளார். அந்த பணத்தை தனது தொழில் மற்றும் வியாபாரத்திற்கு பயன்படுத்த சேதன் விரும்பினார். பணம் கையிக்கு கிடைத்தவுடன் 3 ஆண்டுகளில் தன்னால் பண ரீதியாக பெரிய அளவில் வளர முடியும் என்று சேதன் செளதிரி ஷியாவிடம் உத்தரவாதம் கொடுத்துள்ளார். கேதனை கொலை செய்த சில மாதங்கள் கழித்து ஷியாவின் பெற்றோரிடம் சென்று ஷியாவை திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்க சேதன் திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்துள்ளது. கொலைக்கு 34 நிமிடத்திற்கு முன் காதலனுக்கு போன்! ஷியா மற்றும் சேதனின் மொபைல் போன்களை ஆய்வு செய்தபோது ஷியா தனது போனில் இருந்து கேதனை கொலை செய்வதற்கு 34 நிமிடத்திற்கு முன்பு ரகசியமாக போன் செய்து சேதனிடம் பேசி இருக்கிறார். இந்த உரையாடலில் புனே லோஹாகட் மலை கோட்டையில் கோட்டையில் தாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதையும், அருகில் சுற்றுலா பயணிகள் யாரும் இல்லாத இடத்தை தேர்வு செய்து அதனை சேதனுக்கு தெரிவித்ததாகவும் தெரிய வந்துள்ளது. கொலை செய்வதற்கான இடத்தை தேர்வு செய்ததும் அதற்கு சிறிது தூரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறி ஷியா தரையில் அமர்ந்து கொண்டார். அந்த நேரத்தில் கேதன் ஷியாவிடமிருந்து சிறிது தூரத்தில் இருந்தபோது அங்கு பின்புறமாக வந்து 400 அடி பள்ளத்தில் சேதன் தள்ளி விட்டுள்ளார். அதோடு அந்த இடத்தில் இருப்பதை சாதுர்யமாக ஷியா தவிர்த்துள்ளார். அருகில் இருந்தால் கேதன் அகர்வால், ஷியாவின் கையை பிடித்து தப்பிக்க முயற்சி செய்யக்கூடும் என்பதை தெரிந்து கொண்டு இவ்வாறு செய்துள்ளார் என போலீஸார் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Full artikkel — se lenken under



