சென்னை, தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் பங்கேற்கும் முதல் சுதந்திர தின விழா இன்று சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெறுகிறது. தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாவில் காலை 8.45 மணிக்கு அவர் தேசியக் கொடியை ஏற்றுகிறார் காவல்துறையினரின் அணிவகுப்பு இதற்காக இன்று காலை 8.20 மணிக்கு நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் விஜய் புறப்படுகிறார். மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே வந்ததும், காவல்துறையின் மோட்டார் சைக்கிள்கள் அணிவகுத்து அவரை கோட்டைக்கு அழைத்து வருகின்றன. கோட்டை கொத்தளத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளும் விஜய், தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிடுகிறார். பின்னர் கோட்டை கொத்தளத்துக்கு சென்று 8.45 மணியளவில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். சுதந்திர தின உரை தேசியக் கொடியை ஏற்றிய பிறகு முதல்-அமைச்சர் விஜய் சுதந்திர தின உரையாற்றுகிறார். இதில் தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கான ஓய்வூதிய உயர்வு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட உள்ளார். விருதுகள் வழங்கல் சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்-அமைச்சரின் நல் ஆளுமை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை விஜய் வழங்குகிறார். விழாவையொட்டி சென்னை முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-celebration-chief-minister-vijay-to-hoist-the-national-flag-at-the-fort-ramparts-today




