தஞ்சை, கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டுவதை தவெக அரசு தடுக்க தவறியதாகவும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தியும் தஞ்சையில் திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை திமுக இளைஞரணி செயலாளரும், சட்டசபை எதிர்க்கடை தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தினார். ஆர்ப்பாட்டத்தின்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் வந்திருக்க வேண்டும். காவிரியில் ஒருசொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ஆனால் இதுபற்றி இன்று இருக்கும் முதல்-அமைச்சர் வாயை திறந்து பேசவில்லை. முதல்-அமைச்சருக்கு இருக்கும் ஒரே கவலை திமுக மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்பதுதான்’ என்றார். அப்போது அங்கு கூடியிருந்த திமுகவினர், நடிகை ஒருவரின் பெயரை கூறி கூச்சலிட்டனர். அப்போது தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், எங்கே தண்ணீர் வருகிறதோ இல்லையோ அங்கே தண்ணீர் வர வேண்டும். நான் காவிரியை கூறினேன்’ என்றார். இந்த பேச்சு இரட்டை அர்த்தம் கொண்டதாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும், ஆபாசமாகவும் இருப்பதாக உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக உள்பட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. Would the Leader of the Opposition, Mr. Udhayanidhi Stalin, play this part of his speech to his own daughter and son? Such disgusting taste. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/udayanidhi-stalin-controversial-speech-at-dmk-protest




