Full artikkel
தமிழ்நாட்டில் உள்ள சில மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை முழுமையாகத் தனியார் வசம் ஒப்படைக்க அரசு முடிவெடுத்திருப்பதாக கடந்த சனிக்கிழமை தகவல்கள் வெளியாகின. தமிழ்நாடு அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. ஈரோடு மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் இது குறித்து தெரிவித்த தொழிலாளர்கள், "ஈரோடு மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களில் 1,200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த மற்றும் தினக்கூலிப் பணியாளர்கள் பணியாற்றி வருகிறோம். தூய்மைப் பணியாளர்களுக்கு ₹760, ஓட்டுநர்களுக்கு ₹792 தினக்கூலியாக வழங்கப்படுகிறது. தனியார்மயமாக்கப்பட்டால், இடைத்தரகர்களின் கமிஷன் போக எங்களுக்கு வெறும் ₹400 மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்படும். 10 முதல் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இதே வேலையை நம்பி இருக்கும் எங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். தமிழ்நாடு அரசு இந்த முடிவைக் கைவிட வேண்டும். எங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை, இந்த வேலைநிறுத்தப் போராட்டமும் அடுத்தகட்ட ஆர்ப்பாட்டங்களும் தொடரும்" என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Full artikkel — se lenken under




