சென்னை, நேற்று சரிவை சந்தித்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. தங்கம் விலை தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன் இறக்கத்தை சந்தித்து வந்த நிலையில், இந்த வார தொடக்கத்தில் இருந்தே ஏற்றத்தை கண்டது. அதன்படி, கடந்த திங்கட்கிழமை ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 150-க்கும். பவுன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. செவ்வாய், புதன், வியாழன் என 3 நாட்களும் அதிகரித்து இருந்த தங்கம் விலை, நேற்று அதிரடியாக சரிவை சந்தித்தது. நேற்று சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.270 குறைந்து ஒரு கிராம் ரூ.13,230-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்றைய தங்கம் விலை நேற்று சரிவை சந்தித்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்துஒரு சவரன் ரூ.1,06,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,300-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை வெள்ளி் விலையில் மாற்றமில்லை. அதன்படி, வெள்ளி ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/rise-in-gold-prices-what-is-the-situation-today




