சென்னை, பள்ளி வளாகங்களில் அரசியல் தொடர்பாக எந்த நிகழ்வுகளும் நடைபெறக்கூடாது என்றும், அவ்வாறு நடத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஏற்கனவே எச்சரித்துள்ளார். இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில இன்று காலை கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக கட்சி நிகழ்ச்சி அரசு பள்ளி ஒன்றில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தொடக்க கல்வித்துறை இயக்குனர் நரேஷ் ஆகியோர் இணைந்து ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளனர். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையில், பள்ளி வளாகங்களில் கற்றல், கற்பித்தல் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகள் தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை விதிமுறைகளின்படி பள்ளிகள் சாதி, மத பாகுபாடு இன்றி, அரசியல் சார்புகள் இன்றி பாடம் நடத்தக்கூடிய ஒரு இடமாகும். அஙகே மற்ற செயல்பாடுகளுக்கு அனுமதி கிடையாது. குறிப்பாக அரசியல் நிகழ்வுகள், பிரிவினைவாத வகுப்புவாத நிகழ்வுகள் எதற்கும் அனுமதி கிடையாது. இதனை அதிகாரிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியான செயல்பாடுகளுக்கு பள்ளி வளாகங்களை பயன்படுத்துவது சில நேரங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி, மாணவர்களிடையே மன அழுத்தத்தையும் ஏற்படுத்திவிடும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, பள்ளி வளாகங்களை கல்வி சாராத நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்பதில் அதிகாரிகள முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் எனவும், பள்ளிக்கல்வித்துறை விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-non-academic-events-in-government-schools-school-education-department-statement




