மும்பை, நக்சலைட்டு தந்தை மராட்டிய மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தின் போகாபூர் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் அரவிந்தா (வயது 20). இவரது தந்தை ராஜ்பாபு பர்சாகடே, கடந்த 2005-ம் ஆண்டு சில காரணங்களால் தனது பஞ்சாயத்து வேலையை விட்டுவிட்டு நக்சலைட்டு அமைப்பில் சேர்ந்தார். இதனால் அவரது குடும்ப உறுப்பினர்கள் பெரும் துயரத்திற்கு ஆளானார்கள். அரவிந்தாவின் தாய் லதா, தனது கணவரை தேடி குழந்தையுடன் காடுகளுக்குள் அலைந்துள்ளார். பல இன்னல்களுக்கு பிறகு, கடந்த 2010-ம் ஆண்டு ராஜ்பாபு பர்சாகடே போலீசில் சரணடைந்து சாதாரண வாழ்க்கைக்கு திரும்பினார். மகள் என்ஜினீயர் ஆனார் சாலை வசதி, மின்சார வசதி கூட இல்லாத கிராமத்தில் வசித்து வந்த அரவிந்தா, தனது தாயின் கஷ்டங்களை பார்த்து வளர்ந்தார். வறுமை வாட்டிய போதும் விடாமுயற்சியுடன் படித்து, கடந்த ஆண்டு சிவில் என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பை முடித்தார். தற்போது அவர் 'லாயிட்ஸ் மெட்டல்ஸ் அண்ட் எனர்ஜி' நிறுவனத்தில் பயிற்சி என்ஜினீயராக பணியில் சேர்ந்துள்ளார். இதுகுறித்து அரவிந்தா கூறும்போது, "என் தாய் பட்ட கஷ்டங் களுக்கு என்னால் பலன் கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக் கிறது. இந்த வேலை இத்துடன் முடிவதல்ல, வேலை பார்த் துக்கொண்டே அடுத்து பி.டெக் படிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்” என்றார். நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த கட்சிரோலி, கடந்த மார்ச் மாதம்தான் நக்சலைட்டுகள் இல்லாத மாவட்டமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/daughter-of-a-naxalite-achieves-success-as-a-civil-engineer




