கயல் சீரியலில் இருந்து ஹீரோ சஞ்சீவ் வெளியேறி விட்டதாகத் தெரிய வருகிறது. கதைப்படி சீரியலில் அவர் கோமா நிலையிலிருப்பதாகக் காட்டப்பட்டாலும், இனி அவர் சீரியலில் தொடர வாய்ப்பில்லை என்றே கூறுகிறார்கள் சீரியலுடன் தொடர்புடையவர்கள். சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் கயல். ஹீரோவாக சஞ்சீவும் அவருக்கு ஜோடியாக சைத்ராவும் நடித்து வந்தனர். சன் டிவி தொடர்களிலேயே டி.ஆர். பி. ரேட்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இடம்பிடித்து வரும் தொடராக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் கடந்த சில மாதங்களாகவே ஹீரோ சஞ்சீவ் தொடர்பான காட்சிகளைப் பார்க்க முடியவில்லை. தற்போது அவர் கோமா நிலைக்குச் சென்று விட்டதாக காட்டப்பட்டு வருகிறது. என்ன நடந்தது? சஞ்சீவ் இனி சீரியலில் வருவாரா? 'கயல்' யூனிட் வட்டாரத்தில் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். ஆல்யா - சஞ்சீவ் ''சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சில சம்பவங்களின் தொடர்ச்சியாகவே அவர் சீரியல்ல இருந்து வெளியேறி இருக்கார்னு சொல்றாங்க. அவருக்கு நெருக்கமான ஓரிருவைத் தவிர மத்த யாருக்கும் டீடெய்லா என்ன நடந்ததுனு தெரியல. ஷூட்டிங் ஸ்பாட்ல ஒரு முறை ஒரு பஞ்சாயத்து ஆச்சு. அதன் தொடர்ச்சியா அடுத்த சில தினங்கள்ல இருந்து சஞ்சீவும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர்றதில்ல'' என்கிறார்கள் அவர்கள். 'எங்களுக்குத் தெரிய, இந்த சீரியலில் இனி சஞ்சீவ் வர்ற்துக்கு வாய்ப்பில்லை என்றும் சிலர் கூறினார்கள். முன்னதாக இதே கயல் தொடரில் நடித்து வந்த நடிகர் ஐயப்பனின் மனைவி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று 'இந்த தொடரில் கமிட் ஆன பிறகு ஐயப்பன் வீட்டுககே வருவதில்லை' என பிரச்னை செய்து அது போலீஸ் புகார் வரை போனது நினைவிருக்கலாம். அப்போது முதல் ஐயப்பனும் சீரியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடரின் ஹீரோ விஷயத்திலும் யொரு சிக்கல் உண்டாகியிருப்பதால் சஞ்சீவுக்குப் பதில் வேறு யரையாவது கமிட் செய்வதா அல்லது அவருடன் பேசி சமாதானம் செய்து திரும்பவும் கூட்டி வருவதா எனத் தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறதாம் சேனலும் தயாரிப்புத் தரப்பும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://cinema.vikatan.com/television/is-tv-actor-sanjeev-quit-from-kayal-serial




